நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது 6.6% ஆக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அதேவேளையில், 2026- 27 நிதியாண்டுக்கான வளர்ச்சி 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாகவும் கணித்துள்ளது.
முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி உலக வங்கி கணித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
4.8 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா 2ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 0.2 விழுக்காடு, ரஷ்யா 0.6 விழுக்காடு,பிரான்ஸ் 0.7 விழுக்காடு, ஜப்பான் 1.1 விழுக்காடு, பிரிட்டன் 1.3 விழுக்காடு, அமெரிக்கா 2 விழுக்காடு வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் வளர்ச்சிக் குறித்த கணிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் முன்னிலையில் உள்ள நிலையில் சீனாவும், நைஜீரியாவும் தலா 4.2 விழுக்காடு வளர்ச்சியுடன் 2ம் இடத்தில் உள்ளன.
அமெரிக்கா 2.1 விழுக்காடு,பிரிட்டன் 1.3 விழுக்காடு, ரஷ்யா 1 விழுக்காடு, ஜெர்மனி 0.9 விழுக்காடு, பிரான்ஸ் 0.9 விழுக்காடு, ஜப்பான் 0.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.


0 Comments