இந்த ஊதியக்குழு ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் (பகுதி நேரம்) ஒரு உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்டிருக்கும். அது அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை வழங்கும்.
தேவைப்பட்டால், பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்போது ஏதேனும் விஷயங்களில் இடைக்கால அறிக்கைகளை அனுப்புவதை இது பரிசீலிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, ஓய்வூதிய சலுகைகள் மற்றும் பிற சேவை நிலைமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அவற்றில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கும் மத்திய ஊதியக் குழுக்கள் அவ்வப்போது அமைக்கப்படுகின்றன.
வழக்கமாக, ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய குழுக்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் செயலாக்கம் 01.01.2026 முதல் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளை ஆராய்ந்து மாற்றங்களை பரிந்துரைக்க 8-வது மத்திய ஊதியக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு 2025 ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.


0 Comments