தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடுகள் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 மாதிரி கிராமங்களின் தொகுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
2025 செப்டம்பர் மாதத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 2019=100) 0.11 புள்ளிகள் குறைந்து 136.23 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.18 புள்ளிகள் குறைந்து 136.42 ஆகவும் இருந்தது.
செப்டம்பரில் உணவு குறியீடு விவசாயத் தொழிலாளர்களுக்கு 0.47 புள்ளிகளும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 0.58 புள்ளிகளும் குறைந்துள்ளது.


0 Comments