தமிழ்நாடு காவல் துறையின் ஒரு பெருமைமிகு சாதனையாக, தமிழக இணையவழி குற்றப் பிரிவு காவல்துறையினர் அக்.10, 11ம் தேதிகளில் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள கிராண்ட் ஹயாத்தில் நடைபெற்ற cocon 2025 மாநாட்டின் புகழ்பெற்ற Law Enforcement Track பிரிவில் இரண்டாம் இடத்தை வென்றுள்ளனர்.
சட்ட அமலாக்க அதிகாரிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Law Enforcement Track என்பது இணைய குற்றங்கள், டிஜிட்டல் விசாரணைகள் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தேசிய பாதுகாப்பு சவால்கள் போன்ற பரிமாணங்களை ஆராய்வதற்கான ஒரு சிறப்புப் நிகழ்ச்சியாகும்.
இதில் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகள் கலந்துகொண்டு இணையவழி குற்றங்கள் மற்றும் அதை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த அமைப்பின் முக்கிய நிகழ்வாக அமைந்த Law Enforcement Agency Capture the Flag (LEA CTF) Challenge Event-ல் மாநாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிவுசெய்யப்பட்ட காவல் அமைப்புகள் கலந்துகொண்டன.
இதில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு சார்பாக விழுப்புரம் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ராஜசேகர், நாமக்கல் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பூர்ணிமா, மற்றும் வேலூர் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) யுவராணி ஆகியோர் இணைந்த குழு, இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் மித்தல், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டாம் இடத்தைப் வென்றுள்ளது.


0 Comments