இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் 20 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்தார்.
அந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்ற நிலையில், அதை நிராகரித்த ஹமாஸ், சில திருத்தங்களை கேட்டது. ஆனால், திட்டதை ஏற்றாக வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட மஸ்த்தியஸ்த நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஹமாசும் தன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதாகவும் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.


0 Comments