NATIONAL CRIME RECORDS BUREAU REPORT 2023
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை 2023
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை 2023
TAMIL
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் அளித்த தரவுகள் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் காவல் துறையினா் பிடிஆணை இல்லாமல் கைது செய்யும் விதமாக, 62,41,569 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 58,24,946 குற்றங்களுடன் ஒப்பிடுகையில், 7.2 சதவீதம் அதிகம்.
கொலை வழக்குகளின் எண்ணிக்கை
உத்தர பிரதேசம் 3,206, பிகாா் 2,862, மகாராஷ்டிரம் 2,208, மத்தியப் பிரதேசம் 1,832, ராஜஸ்தான் 1,804. தமிழ்நாட்டில் 1681 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 4,48,211, இது 2022 ஆம் ஆண்டில் 4,45,256 ஆகவும், 2021 இல் 4,28,278 ஆகவும் அதிகரித்துள்ளது.
பெண்கள் மக்கள்தொகை மதிப்பீடுகளின் அடிப்படையில், ஒரு லட்சம் பெண்களுக்கு 66.2 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், இந்த வழக்குகளில் நாட்டில் ஒட்டுமொத்த குற்றப்பத்திரிகை தாக்கல் விகிதம் 77.6 சதவீதமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் 5 மாநிலங்களில், உத்தரப்பிரதேசத்தில் 66,381 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் 47,101, ராஜஸ்தான் 45,450, மேற்கு வங்கம் 34,691, மத்திய பிரதேசம் 32342, தமிழ்நாட்டில் 8,943 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 365. புதுச்சேரியில் 212 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குற்ற விகிதங்கள் அடிப்படையில் தெலங்கானாவில் ஒரு லட்சம் பெண்களுக்கு 124.9 குற்ற விகிதங்களில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 114.8, ஒடிசா 112.4, ஹரியாணா 110.3 மற்றும் கேரளம் 86.1 விகிதமாக பதிவாகியுள்ளன.
பாலியல் வன்கொடுமை தொடர்பான 29,670 வழக்குகளில் ஒரு லட்சத்திற்கு 4.4 விகிதத்தில் பதிவாகியுள்ளன. வரதட்சணை மரணங்களில் ஒரு லட்சத்திற்கு 0.9 விகிதத்தில் மொத்தம் 6,156 வழக்குகளும், தற்கொலைக்குத் தூண்டுதலில் ஒரு லட்சத்திற்கு 0.7 விகிதத்தில் 4,825 வழக்குகளும், அவமதித்தல் தொடர்பாக ஒரு லட்சத்திற்கு 1.3 விகிதத்தில் 8,823 வழக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498ஏ இன் கீழ் கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தல் தொடர்பாக 1,33,676 வழக்குகள் மற்றும் ஒரு லட்சத்திற்கு 19.7 விகிதத்தில் மிகப்பெரிய அளிவில் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து பெண்களைக் கடத்துதல் மற்றும் கடத்தல் தொடர்பாக 88,605 வழக்குகள் மற்றும் ஒரு லட்சத்திற்கு 13.1 விகிதத்தில் பதிவாகியுள்ளன.
சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் 22,393, மகாராஷ்டிரம் 22,390, உத்தர பிரதேசம் 18,852, ராஜஸ்தான் 10,577, அஸ்ஸாம் 10,174, தமிழ்நாட்டில் 6,968 குற்றச் சம்பவங்களும், புதுச்சேரியில் 156 குற்றச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம் 5,738, மகாராஷ்டிரம் 5,115, தெலங்கானா 2,150, தமிழ்நாடு 2,104, கா்நாடகம் 1,840, புதுச்சேரியில் 8 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2023-இல் நாட்டில் மூத்த குடிமக்களுக்கு எதிராக மொத்தம் 27,886 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 201 மூத்த குடிமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் 211 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது சமூகத்தில் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டுகிறது.
கொலை அல்லாத குற்றவியல் மனிதக் கொலை வழக்குகளிலும் தமிழ்நாடு 2 ஆவது இடத்தில் உள்ளது. இதில் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தப்பிரதேசம் 15 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் 15,130, ராஜஸ்தான் 8,449, மத்தியப்பிரதேசம் 8,232, பிகாா் 7,064, மகாராஷ்டிரம் 3,024, தமிழ்நாட்டில் 1,921 குற்றங்களும், புதுச்சேரியில் 4 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்களில் மணிப்பூா் 3,399, மத்திய பிரதேசம் 2,858, ராஜஸ்தான் 2,453, ஒடிஸா 662, தெலங்கானா 575, தமிழ்நாட்டில் 48 வழக்குகளும்., புதுச்சேரியில் எந்தக் குற்றமும் பதிவாகவில்லை.
பொருளாதார குற்றங்கள்
முதல் 5 மாநிலங்களில் ராஜஸ்தான் 27,675, தெலங்கானா 26,881, உத்தரப்பிரதேசம் 23,428, மகாராஷ்டிரம் 19,803, பிகாா் 12,006, தமிழ்நாட்டில் 6,661, புதுச்சேரியில் 94 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
இணையவழி குற்றங்கள்
இதில் கா்நாடகம் 21,889, தெலங்கானா 18,236, உத்தரப் பிரதேசம் 10,794, மகாராஷ்டிரம் 8,103, பிகாா் 4,450, தமிழ்நாட்டில் 4,121, புதுச்சேரியில் 147 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் எண்ணிக்கை
கொலை குற்றங்கள் 27,721, பெண்களுக்கு எதிரானவை 4,48,211, சிறாா்களுக்கு எதிரானவை 1,77,335, முதியவா்களுக்கு எதிரானவை 27,886, பட்டியலினத்தவருக்கு எதிரானவை 57,789, பழங்குடியினருக்கு எதிரானவை 12,960, பொருளாதார குற்றங்கள் 2,04,973, இணையவழி குற்றங்கள் 86,420.
விபத்துகள்
2023-இல் நாட்டில் நிகழ்ந்த மொத்த விபத்துகள் 4,64,029. இதில், காயமடைந்தவா்கள் 4,47,969, உயிரிழந்தவா்கள் 1,73,826. உயிரிழந்தோா்ின் முதல் 5 மாநிலங்களில் மகாராஷ்டிரம் 69,809, மத்திய பிரதேசம் 43,320, உத்தரப்பிரதேசம் 43,207, தமிழ்நாடு 32,797, கா்நாடகம் 29,981, புதுச்சேரியில் 1,103 போ் விபத்துகளில் உயிரிழந்தனா்.
இருசக்கர வாகன விபத்துகளால் அதிக மரணங்கள் தமிழ்நாட்டில் நோ்ந்துள்ளது. அந்த ஆண்டு 11,490 போ் இருசக்கர வாகன விபத்துகளால் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்த விபத்துகளில் சிக்கி உத்தரப்பிரதேசத்தில் 8,370 போ் உயிரிழந்தனா்.
ஊழல் குற்றங்கள்
ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் அதுதொடா்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு வழக்குகளின் எண்ணிக்கையில் நாடு முழுவதும் 4.049 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 302, புதுச்சேரியில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளது.
திருட்டு, தாக்குதல், சொத்து பிரச்னை போன்ற குற்றச் செயல்களில் சென்னையில் 399 வழக்குகளும், ஹைதராபாத் 292, தில்லி 361, மும்பையில் 518 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ENGLISH
NATIONAL CRIME RECORDS BUREAU REPORT 2023: The National Crime Records Bureau has released its report for the year 2023, based on data provided by police stations across states and union territories. Accordingly, 62,41,569 crimes were registered in the country in 2023 in which the police arrested without a warrant. This is 7.2 percent more than the 58,24,946 crimes registered in 2022.
Number of murder cases
Uttar Pradesh 3,206, Bihar 2,862, Maharashtra 2,208, Madhya Pradesh 1,832, Rajasthan 1,804. Tamil Nadu has registered 1681 murder cases. Puducherry has registered 28 murder cases.
Crimes against women
The total number of crime cases against women in 2023 was 4,48,211, up from 4,45,256 in 2022 and 4,28,278 in 2021. Based on the female population estimates, there were 66.2 crime incidents per lakh women, and the overall chargesheet filing rate in the country in these cases was 77.6 percent, the statistics show.
Among the top 5 states, Uttar Pradesh reported 66,381 cases, followed by Maharashtra with 47,101, Rajasthan with 45,450, West Bengal with 34,691, Madhya Pradesh with 32,342, and Tamil Nadu with 8,943 crimes. Out of these, 365 were cases of sexual assault. Puducherry reported 212 crime incidents.
In terms of crime rates, Telangana leads with a crime rate of 124.9 per lakh women, followed by Rajasthan at 114.8, Odisha at 112.4, Haryana at 110.3 and Kerala at 86.1.
Of the 29,670 cases of sexual assault, a rate of 4.4 per lakh, a total of 6,156 cases were reported for dowry deaths at a rate of 0.9 per lakh, 4,825 cases for abetment to suicide at a rate of 0.7 per lakh, and 8,823 cases for contempt at a rate of 1.3 per lakh.
The highest number of cases under Section 498A of the Indian Penal Code (IPC) was reported for cruelty by husband or relatives at a rate of 19.7 per lakh. This was followed by 88,605 cases of abduction and trafficking of women, at a rate of 13.1 per lakh.
Crimes against children
NATIONAL CRIME RECORDS BUREAU REPORT 2023: The top 5 states were Madhya Pradesh with 22,393, Maharashtra with 22,390, Uttar Pradesh with 18,852, Rajasthan with 10,577, Assam with 10,174, Tamil Nadu with 6,968 crimes and Puducherry with 156 crimes.
Crimes against senior citizens
The top 5 states were Madhya Pradesh with 5,738, Maharashtra with 5,115, Telangana with 2,150, Tamil Nadu with 2,104, Karnataka with 1,840 and Puducherry with 8 crimes. A total of 27,886 crimes were reported against senior citizens in the country in 2023.
201 senior citizens were murdered in Tamil Nadu. 211 deaths were reported under various crime categories.
This shows the challenges faced by senior citizens in the society. Tamil Nadu also ranks 2nd in non-murder criminal homicide cases. Out of these, 11 cases were reported. Uttar Pradesh is at the top with 15 cases.
Crimes against Scheduled Castes
NATIONAL CRIME RECORDS BUREAU REPORT 2023: The top 5 states are Uttar Pradesh with 15,130, Rajasthan with 8,449, Madhya Pradesh with 8,232, Bihar with 7,064, Maharashtra with 3,024, Tamil Nadu with 1,921 and Puducherry with 4 crimes.
Crimes against tribals
The top 5 states are Manipur (3,399), Madhya Pradesh (2,858), Rajasthan (2,453), Odisha (662), Telangana (575), Tamil Nadu (48), Puducherry (no crime reported).
Economic crimes
The top 5 states are Rajasthan (27,675), Telangana (26,881), Uttar Pradesh (23,428), Maharashtra (19,803), Bihar (12,006), Tamil Nadu (6,661), and Puducherry (94).
Cybercrimes
Of these, Karnataka reported 21,889, Telangana 18,236, Uttar Pradesh 10,794, Maharashtra 8,103, Bihar 4,450, Tamil Nadu 4,121, and Puducherry 147 cases.
Number of crimes committed across the country
NATIONAL CRIME RECORDS BUREAU REPORT 2023: Murder crimes 27,721, crimes against women 4,48,211, crimes against children 1,77,335, crimes against the elderly 27,886, crimes against Scheduled Castes 57,789, crimes against Scheduled Tribes 12,960, economic crimes 2,04,973, cybercrimes 86,420
Accidents
The total number of accidents in the country in 2023 was 4,64,029. Of these, 4,47,969 were injured and 1,73,826 died. The top 5 states in terms of deaths were Maharashtra (69,809), Madhya Pradesh (43,320), Uttar Pradesh (43,207), Tamil Nadu (32,797), Karnataka (29,981), and Puducherry (1,103).
Tamil Nadu had the highest number of deaths due to two-wheeler accidents. That year, 11,490 people died due to two-wheeler accidents. This was followed by Uttar Pradesh (8,370) in those accidents.
Corruption Crimes
The number of cases registered under the Prevention of Corruption Act and related sections of the Indian Penal Code across the country is 4,049. Of these, 302 cases were registered in Tamil Nadu and 4 cases were registered in Puducherry.
In crimes such as theft, assault and property disputes, 399 cases were registered in Chennai, 292 in Hyderabad, 361 in Delhi and 518 in Mumbai.
0 Comments