NOBEL PRIZE FOR CHEMISTRY 2025
2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு
2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு
TAMIL
NOBEL PRIZE FOR CHEMISTRY 2025 / 2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு: ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் நாட்டின் சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் இந்த பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளை மையபப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 பேருக்கு நேபால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் சாதித்ததற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
உலோக-கரிம கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks - MOFs) எனப்படும் புதிய பொருட்களை முன்னோடியாக உருவாக்கி, அவற்றின் வளர்ச்சிக்குப் பங்களித்ததற்காக இந்த மூவருக்கும் இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது.
வேதியியல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள MOF-கள், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பல சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேதியியலாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
ENGLISH
NOBEL PRIZE FOR CHEMISTRY 2025: The Nobel Prize is announced and awarded every year to honor those who excel in the fields of medicine, physics, chemistry, literature, peace, and economics.
In honor of the memory of Swedish scientist Alfred Nobel, this prize is awarded annually in his name, focusing on 6 fields including medicine, physics, chemistry, literature, peace, and economics.
This Nobel Prize will be awarded on behalf of the Royal Swedish Academy of Sciences. In this context, the Nobel Prizes for the year 2025 are being announced. In that regard, the Nobel Prize in Chemistry has been announced today.
Accordingly, the Nepal Prize has been announced for 3 people. The Nobel Prize will be awarded to Susumu Kitakawa, Richard Robson, and Omar M. Yagi for their achievements in the field of chemistry.
These three are being awarded this high honor for pioneering the development of new materials called Metal-Organic Frameworks (MOFs) and contributing to their development.
The Nobel Committee said that MOFs, which have revolutionized the field of chemistry, have given chemists new opportunities to find solutions to many of the challenges we face in the future.
0 Comments