Recent Post

6/recent/ticker-posts

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025 / 2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025
2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025 / 2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு

TAMIL

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025 / 2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு: உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக?

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025 / 2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இவர்கள் 3 பேருக்கும் புற நோய் எதிர்ப்பு சகிப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டுபிடிப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்றுள்ள ஜப்பான் விஞ்ஞானி சைமன் முன் எப்போதும் அறியப்படாத நோய் எதிர்ப்பு செல்களின் ஒரு வகுப்பை கண்டுபிடித்தார். இது உடலை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஒத்துழைக்கிறது. இதை அவர் 1995ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

நோபல் பரிசு பெற்றுள்ள மேரி ப்ரங்கோ மற்றம் ஃப்ரெட் ராம்ஸ்டெல் இருவரும் 2011ம் ஆண்டு முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தனர்.

அதாவது, மனித மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்தது. அதற்கு அவர்கள் ஃபோக்ஸ்பி3 என்று பெயரிட்டனர். இதை இவர்கள் கண்டுபிடித்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் விஞ்ஞானி சைமனும் இவர்களுடன் இணைந்தார்.

அப்போது, 1995ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்த செல்களின் வளர்ச்சியை ஃபோக்ஸ்பி3 மரபணு நிர்வகிக்கிறது என்று நிரூபித்தார். இவர்களின் கண்டுபிடிப்புகள் நமது செல்கள் நோய் எதிர்ப்பு செல்களை கண்காணித்து நோய் எதிர்ப்பு செல்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஃப்ரெட் ராம்ஸ்டெல் அமெரிக்காவில் உள்ள சோனோமா பயோதெரபிடிக்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். சைமன் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த துறையில் பேராசிரியராக உள்ளார்.

மேரி ப்ரங்கோ அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சியாட்டிலில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார்.

ENGLISH

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025: The Nobel Prize is awarded to outstanding individuals in various fields in the world. In memory of Swedish scientist Alfred Nobel, the Nobel Prize is awarded annually to those who have made achievements in 6 fields: medicine, physics, chemistry, economics, peace, and literature.

While the Nobel Prizes for this year are about to be announced, the Nobel Prize in Medicine has now been announced first.

The Nobel Prize in Medicine for 2025 has been jointly awarded to 3 medical experts, Mary E. Brunkow, Fred Ramsdell, and Shimon Sakaguchi, for their research into how the body's immune system keeps its own organs under control.

Why?

NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025: All 3 of them have been awarded this Nobel Prize for their discoveries related to immune tolerance. How does the immune system work? Their discoveries have been extensively studied.

Nobel Prize-winning Japanese scientist Simon has discovered a previously unknown class of immune cells. This helps strengthen the body's immune system. He discovered this in 1995.

Nobel Prize-winning Mary Franco and Fred Ramstell made a major discovery in 2011. That is, their discoveries were based on changes in the human genome. They named it FoxP3. Two years after their discovery, Japanese scientist Simon also joined them.

Then, in 1995, he proved that the FoxP3 gene controls the growth of cells that he discovered. Their discoveries play an important role in monitoring and managing the immune cells in our cells.

Fred Ramstell is a consultant at Sonoma Biotherapeutics in the United States. Simon is a professor in the Department of Immunology at Osaka University in Japan. Mary Franco holds a PhD from Princeton University, USA, and is currently a project manager at a research institute in Seattle.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel