கோவை கொடிசியா வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (ஸ்டார்ட் அப் தமிழ்நாடு) சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு இன்று (அக்டோபர் 9) துவங்கியது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஸ்டார்ட் அப் இகோ சிஸ்டம், ஸ்டார்ட் அப் விஷன் 2035 ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் பல்வேறு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கான தொழில் முதலீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட பங்கேற்பளர்கள் பங்கேற்றுள்ளன. இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஒன்றிய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்கேற்றுள்ளன.


0 Comments