Recent Post

6/recent/ticker-posts

THIRD INTEGRATED ELEPHANT CENSUS 2025 / மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2025 அறிக்கை

THIRD INTEGRATED ELEPHANT CENSUS 2025
மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2025 அறிக்கை

THIRD INTEGRATED ELEPHANT CENSUS 2025 / மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2025 அறிக்கை

TAMIL

THIRD INTEGRATED ELEPHANT CENSUS 2025 / மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2025 அறிக்கை: இந்தியாவில் யானைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு நீண்ட காலமாகவே முன்னணி வகிக்கிறது. நாட்டின் மிக முக்கியமான உயிரினங்களில் ஒன்றைப் பாதுகாக்க. அறிவியல், மரபு மற்றும் சமூகப் பங்கேற்பை இது ஒருங்கிணைக்கிறது. 

அர்ப்பணிக்கப்பட்ட யானை காப்பகங்கள் மற்றும் சரணாலயங்களை உருவாக்குவது முதல், முதுமலை மற்றும் ஆனைமலையில் உள்ள பாகன் கிராமங்கள் மூலம் பாகன் குடும்பங்களை மறுவாழ்வு அளிப்பது வரை, பாதுகாப்பு மற்றும் சகவாழ்வை சமநிலைப்படுத்தும் முன்னோடி முயற்சிகளுக்கு இந்த மாநிலம் முதன்மை வகிக்கிறது.

மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு (2025) அறிக்கையின் வெளியீடு, இந்தப் பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இது தமிழ்நாட்டின் யானைகள் கணக்கெடுப்பு ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (07.10.2025) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டார். 

அதன்படி, தமிழ்நாட்டில் கணக்கிடப்பட்ட 3,170 காட்டு யானைகள் உள்ளன என்றும், இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 யானைகள் அதிகம் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் யானைகள் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், அகத்தியமலை யானைகள் காப்பகத்தை அறிவித்துள்ளது. தந்தை பெரியார் மற்றும் காவேரி தெற்கு வனவிலங்கு சரணாலயங்களை அறிவித்துள்ளது. 

மேலும் யானைகளின் வாழ்விடத்தின் 2.8 இலட்சம் ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது. இது அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என்று கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மதிப்பீடு. யானைகளின் வாழ்விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலப்பரப்புகளில் நிலையான தரவை உறுதி செய்வதற்காக, கர்நாடகாவுடன் இணைந்து மே 23 முதல் 25, 2025 வரை நடத்தப்பட்டது. 

தமிழ்நாட்டில், இந்த கணக்கெடுப்பு புலிகள் காப்பகங்கள். வனவிலங்கு சரணாலயங்கள். பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்கா உட்பட 26 வனப் பிரிவுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. 

மொத்தம் 2.043 வனத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள். ‘பிளாக் கவுண்ட்’ (Block Count), ‘லைன்-டிரான்செக்ட் (சாணம் கணக்கெடுப்பு)’ (Line-transect dung count), மற்றும் ‘நீர்நிலை கணக்கெடுப்பு’ (Waterhole count) ஆகிய மூன்று நிலையான வழிமுறைகளைப் பயன்படுத்தினர்.

1:1.77 இந்த ஆய்வின் பகுப்பாய்வின்படி, 3,261 சதுர கிலோமீட்டரை உள்ளடக்கிய 681 மாதிரிப் பிரிவுகளின் அடிப்படையில், யானைகளின் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.35 6T 601 மதிப்பிடப்பட்டுள்ளது. 

மொத்த யானைகள் கணக்கெடுப்பில் 44 சதவீதம் வளர்ச்சியடைந்த யானைகள் ஆகும். இதில், ஆண்-பெண் விகிதம் ஆகவும். வளர்ச்சியடைந்த பெண் யானை-கன்றுக்குட்டி விகிதம் 1:0.50 ஆகவும் உள்ளது. ஒரு யானை கூட்டமானது 3 முதல் 16 யானைகள் வரை இருந்தது. 

முதுமலை புலிகள் காப்பகத்தில் மிக அதிக அடர்த்தியாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1.35 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது (மதிப்பிடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 325), இதற்கு அடுத்தபடியாக கூடலூர் வனப் பிரிவு மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன.


ENGLISH

THIRD INTEGRATED ELEPHANT CENSUS 2025: Tamil Nadu has long been a leader in elephant conservation in India. It combines science, tradition and community participation to protect one of the country’s most important species.

From creating dedicated elephant sanctuaries and sanctuaries to rehabilitating elephant families through Bagan villages in Mudumalai and Anaimalai, the state has been at the forefront of pioneering efforts to balance conservation and coexistence.

The release of the Third Integrated Elephant Census (2025) report marks a milestone in this journey. It reveals measurable progress in the health and sustainability of the elephant census in Tamil Nadu.

As part of the Wildlife Week celebrations, the Hon’ble Minister of Forests and Wildlife, Shri. R.S. Rajakannappan, released the latest report at the Secretariat today (07.10.2025). Accordingly, he announced that there are 3,170 wild elephants counted in Tamil Nadu, which is 107 more than the previous census of 3,063.

Under the elephant conservation plans of Tamil Nadu, the Agasthiyamalai Elephant Sanctuary has been declared. The Father Periyar and Cauvery South Wildlife Sanctuaries have been declared. And it has extended protection to more than 2.8 lakh hectares of elephant habitat. 

This reaffirms its importance.” This integrated census assessment was conducted in collaboration with Karnataka from May 23 to 25, 2025, to ensure consistent data on elephant habitats. In Tamil Nadu, the census covered 26 forest divisions including tiger reserves, wildlife sanctuaries, regional forest divisions and one national park. 

A total of 2,043 forest department staff and volunteers participated in it. They used three standard methods: ‘Block Count’, ‘Line-transect dung count’, and ‘Waterhole count’. 1:1.77 According to the analysis of this study, based on 681 sample plots covering 3,261 square kilometers, the elephant density was estimated at 0.35 6T 601 per square kilometer. 

Total elephants The census recorded 44 percent of adult elephants. Of these, the male-female ratio is 1:0.50. The adult female elephant-calf ratio is 1:0.50. A herd of elephants ranged from 3 to 16 elephants. The highest density was recorded in Mudumalai Tiger Reserve at 1.35 per square kilometer (estimated elephant population 325), followed by Gudalur Forest Division and Anaimalai Tiger Reserve.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel