Recent Post

6/recent/ticker-posts

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் மாநிலங்களில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four railway projects in Maharashtra, Madhya Pradesh, Gujarat and Chhattisgarh

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் மாநிலங்களில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four railway projects in Maharashtra, Madhya Pradesh, Gujarat and Chhattisgarh

ரயில்வே அமைச்சகத்தின் 24,634 கோடி ரூபாய் செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வார்தா – பூஷாவல் – 3-வது மற்றும் 4-வது பாதை – 314 கிலோமீட்டர் (மகாராஷ்டிரா), கோண்டியா – டோன்கர்கர் – 4-வது பாதை – 84 கிலோமீட்டர் (மகாராஷ்டிரா, சத்தீஷ்கர்), வதோதரா – ரட்ளம் – 3-வது மற்றும் 4-வது பாதை – 259 கிலோமீட்டர் (குஜராத், மத்தியப்பிரதேசம்) & இடார்சி – போபால் – பினா 4-வது பாதை – 237 கிலோமீட்டர் (மத்தியப்பிரதேசம்).

இந்த நான்கு திட்டங்கள் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இதன் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 894 கிலோமீட்டர் அதிகரிக்கும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பல்தடத் திட்டம் சுமார் 85.84 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மற்றும் 2 முன்னோடி மாவட்டங்கள் (விதிஷா, ராஜ்நந்த்கான்) இடம் பெற்றுள்ள சுமார் 3,633 கிராமங்களுக்கு போக்குவரத்தை மேம்படுத்தும்.

நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சாஞ்சி, சத்பூரா புலிகள் காப்பகம், பீம்பேட்கா பாறை, ஹசாரா அருவி, நவேகான் தேசியப் பூங்கா போன்ற முக்கிய இடங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரயில்போக்குவரத்து வசதி ஏற்படும்.

நிலக்கரி, பெட்டகம், சிமெண்ட், உணவு தானியம், இரும்பு போன்ற பொருட்களை அனுப்புவதற்கான முக்கிய வழித்தடமாக இது உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 78 மில்லியன் டன் சரக்குகளை அனுப்ப முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel