Recent Post

6/recent/ticker-posts

உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Phase III of Biomedical Research and Industry Project

உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Phase III of Biomedical Research and Industry Project

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

திறன்கள் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளுடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டம், அதிநவீன உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான உயர்மட்ட அறிவியல் திறமைகளை மேம்படுத்துவதுடன், மொழிபெயர்ப்பு கண்டுபிடிப்புகளுக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

இது உயர்தர ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்தும். மேலும் அறிவியல் திறனில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, உலகத் தரம் வாய்ந்த உயிரி மருத்துவ ஆராய்ச்சி திறனை உருவாக்க உதவிடும்.

உயிரி தொழில்நுட்பத் துறை, வெல்கம் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 2008-2009 ஆம் ஆண்டில், உயிரி மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், உலகத் தரத்தில் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உயர் படிப்புகளை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டம் 2018 / 19 - ம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்ட பாடத் திட்டங்களுடன் செயல்படுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel