Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi launched the country's first private rocket, Vikram 1

நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi launched the country's first private rocket, Vikram 1

இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். இது நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம். 

இந்நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் என்ற சிறிய ரக ராக்கெட் கடந்த 2022 நவம்பர் மாதம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்நிறுவனம் தற்போது செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்த கூடிய ராக்கெட்டுகளை வர்த்தக ரீதியில் அனுப்ப தயாராகியுள்ளது. இந்நிறுவனம் ஹைதராாபாத்தில் 2 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்துள்ளது.

இன்ஃபினிட்டி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வளாகத்தை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதோடு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் 1 என்ற ராக்கெட்டையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel