Recent Post

6/recent/ticker-posts

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் / Nitish Kumar becomes Chief Minister of Bihar for the 10th time

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் / Nitish Kumar becomes Chief Minister of Bihar for the 10th time

பீகாரில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நிதீஷ் குமார் இன்று பாட்னா காந்தி மைதானத்தில் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

துணை முதல்வர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோர் பதவியேற்றனர். முதல்வர் உட்பட 20 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் போட்டியிடாத நிதீஷ் குமார், சட்டமேலவை உறுப்பினராக நீடிக்கிறார். அவர் மேலும் 5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தால், நாட்டில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைப்பார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel