இந்திய விமானப் படைக்கு 97 தேஜஸ் எம்கே-1ஏ இலகுரக போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏல் உடன் ரூ.62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கையொப்பமிட்டது.
வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல், கடல்சாா் கண்காணிப்புப் பணிகள் என பல்வேறு திறனுடையதாக தேஜஸ் போா் விமானம் திகழ்கிறது.
தேஜஸ் இலகுரக போா் விமானங்களுக்கு 113 ஜெட் என்ஜின்களை கொள்முதல் செய்ய அமெரிக்காவின் ‘ஜிஇ ஏரோஸ்பெஸ்’ நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்தது.
இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
%20on%20signed%20a%20deal%20with%20US-based%20GE%20Aerospace%20to%20pro.webp)

0 Comments