Recent Post

6/recent/ticker-posts

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை 2025 - இந்தியா சாம்பியன் / Blind Women's T20 World Cup 2025 - India Champion

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை 2025 - இந்தியா சாம்பியன் / Blind Women's T20 World Cup 2025 - India Champion

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் புது தில்லி, பெங்களூரு மற்றும் இலங்கையில் நடைபெற்றன. இந்தத் தொடரின் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டியில் நேபாளத்தை சந்தித்தது. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 114/5 ரன்கள் எடுத்தது. நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

இத்துடன் 3 ரன் அவுட்டுகளை செய்து இந்திய மகளிரணி அசத்தினார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 117/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவின் பியூலா சரண் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல்முறையாக நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel