இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சுருண்டது. 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 260 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, இந்திய அணிக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தவிர, 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
அதேநேரத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழப்பது இது இரண்டாவது முறையாகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு, 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருந்ததே சாதனையாக இருந்தது.


0 Comments