பிரேசிலில் பெலேம் நகரில் 2025 நவம்பர் 17 அன்று நடைபெற்ற சிஓபி 30 மாநாட்டில் சர்வதேச புலிகள் கூட்டணி குறித்த உயர்நிலை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
ஒருங்கிணைந்த பருவநிலை மற்றும் பல்லுயிர் பெருக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்திற்கு நேபாள அரசின் வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் டாக்டர் மதன் பிரசாத் பரியார் தலைமை தாங்கினார்.


0 Comments