உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து எர்ணாகுளம்-பெங்களூர் உள்பட நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், ஃபிரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.
பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தவிர, ஃபிரோஸ்பூர்–டெல்லி, லக்னோ–சஹரன்பூர் மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நான்கு புதிய ரயில்களுடன், நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 160 - ஐக் கடந்துள்ளது.


0 Comments