Recent Post

6/recent/ticker-posts

பிரெஞ்சு விமானப் படையுடனான இருதரப்பு வான் பயிற்சியின் 8வது கருடா 25 பயிற்சி / 8th Garuda 25 exercise of bilateral air training with French Air Force

பிரெஞ்சு விமானப் படையுடனான இருதரப்பு வான் பயிற்சியின் 8வது கருடா 25 பயிற்சி / 8th Garuda 25 exercise of bilateral air training with French Air Force

இந்திய விமானப்படை , பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையுடன் இணைந்து நவம்பர் 16 முதல் 27 வரை பிரான்சின் மோன்ட்-டி-மார்சனில் நடைபெறும் 'கருடா 25' என்ற இருதரப்பு வான் பயிற்சியின் 8-வது பதிப்பில் பங்கேற்கிறது.

இந்திய விமானப் படைப்பிரிவு எஸ்யு-30எம்கேஐ போர் விமானங்களுடன் நவம்பர் 10 அன்று பிரான்சுக்கு வந்து சேர்ந்தது. இந்தப் பயிற்சியின் போது, இந்திய விமானப்படையின் எஸ்யு-30எம்கேஐ விமானம், பிரெஞ்சு பல்பணி போர் விமானங்களுடன் இணைந்து சிக்கலான உருவகப்படுத்தப்பட்ட வான் போர் சூழ்நிலைகளில் செயல்படும்,

கருடா 25 பயிற்சி, தொழில்முறை தொடர்பு, செயல்பாட்டு அறிவைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இரு விமானப்படைகளுக்கும் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பது, பலதரப்பு பயிற்சிகள் மூலம் நட்பு வெளிநாட்டு விமானப்படைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதற்கும், விமான நடவடிக்கைத் துறையில் பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்குமான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel