மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீசியம், கிராஃபைட், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றின் ராயல்டி விகிதத்தை பின்வருமாறு குறிப்பிட/திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது:
சீசியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் 2% விதிக்கப்படும்.
கிராஃபைட எண்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான கார்பனுடனான கிராஃபைட்டுக்கு, மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரியின் சராசரி விற்பனை விலையில் 2% ராயல்டியாக விதிக்கப்படும்.
எண்பது சதவீதத்திற்கும் குறைவான நிலையான கார்பனுடனான கிராஃபைட்டுக்கு, மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரியின் சராசரி விற்பனை விலையில் 4% ராயல்டியாக விதிக்கப்படும்.
ரூபிடியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள ரூபிடியம் உலோகத்தின் மீது விதிக்கப்படக்கூடிய ரூபிடியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் 2% ராயல்டியாக விதிக்கப்படும்.
சிர்கோனியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சிர்கோனியம் உலோகத்தின் மீது விதிக்கப்படக்கூடிய சிர்கோனியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் 1% ராயல்டியாக விதிக்கப்படும்.
மத்திய அமைச்சரவையின் மேற்கண்ட முடிவு, சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றைக் கொண்ட கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவதை ஊக்குவிக்கும்.
கிராஃபைட்டின் ராயல்டி விகிதங்களை மதிப்பு அடிப்படையில் நிர்ணயிப்பது, தரங்கள் முழுவதும் கனிமத்தின் விலையில் ஏற்படும் மாற்றத்தை விகிதாசாரமாக பிரதிபலிக்கும்.
இந்த கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, இறக்குமதியைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலி பாதிப்புகளைக் குறைக்கவும், நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.
கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவை உயர் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமான கனிமங்கள் ஆகும்.


0 Comments