மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028.ல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக்கு முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments