Recent Post

6/recent/ticker-posts

FIFA U-17 உலக கோப்பை - போர்ச்சுகல் அணி சாம்பியன் / FIFA U-17 World Cup - Portugal team champions

FIFA U-17 உலக கோப்பை - போர்ச்சுகல் அணி சாம்பியன் / FIFA U-17 World Cup - Portugal team champions

20-வது ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 48 அணிகள் இதில் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரியா அணிகள் முன்னேறின.

இதில் நாக்-அவுட் சுற்றில் பெல்ஜியம், மெக்சிக்கோ, சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணியை போர்ச்சுகல் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி இருந்தது. 2003-க்கு பிறகு போர்ச்சுகல் அணி முதல் முறையாக இந்த தொடருக்கு முன்னேறி இருந்தது. இதே போல ஆஸ்திரியா அணியும் இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலியை நாக்-அவுட் போட்டிகளில் வீழ்த்தியது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் அனிசியோ கேப்ரல் கோல் பதிவு செய்தார். இறுதி வரை முயற்சித்தும் ஆஸ்திரியா அணியால் கோல் பதிவு செய்ய முடியவில்லை.

இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மேட்டியஸ் மிட் தங்க பந்து விருதையும், ஆஸ்திரியா அணியின் ஜோஹன்னஸ் மோசர் தங்க காலணி விருதையும், போர்ச்சுகல் கோல் கீப்பர் ரொமாரியோ குன்யா கோல்டன் கிளவ் விருதையும் வென்றனர். 

இந்த தொடரின் மூன்றாம் இடத்தில் இத்தாலி பெற்றது. முன்னதாக, யு-17 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரிலும் போர்ச்சுகல் அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel