Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரம் - ஐநா விசாரணை குழுத் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி நியமனம் / Former Indian judge appointed as head of UN inquiry into Israel-Palestine conflict

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரம் - ஐநா விசாரணை குழுத் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி நியமனம் / Former Indian judge appointed as head of UN inquiry into Israel-Palestine conflict

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவது குறித்தும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அமைத்தது. 

இந்தக் குழுவானது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அங்கு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விதிமீறல்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

இதுவரை இந்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவின் தலைவராகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணரான நவி பிள்ளை செயல்பட்டு வந்தார்.

அவர் தனது பணிக்காலம் முடிந்து சமீபத்தில் ஐநா பொதுச்சபையில் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்து விடைபெற்றார்.  இந்நிலையில், காலியாக இருந்த அந்தப் பதவிக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான டாக்டர் எஸ்.முரளிதர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருடன் ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ் மும்பா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் சிடோட்டி ஆகியோரும் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்று ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பில் இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச சட்ட அரங்கில் இந்தியாவிற்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel