Recent Post

6/recent/ticker-posts

நான்காவது அதிநவீன போர்க்கப்பலான ‘தாரகிரி’ இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு / Fourth state-of-the-art warship 'Taragiri' handed over to Indian Navy

நான்காவது அதிநவீன போர்க்கப்பலான ‘தாரகிரி’ இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு / Fourth state-of-the-art warship 'Taragiri' handed over to Indian Navy

நீல்கிரி வகுப்பைச் சேர்ந்த நான்காவது போர் கப்பல் (திட்டம் 17A), மசகான் டாக் ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள மூன்றாவது போர் கப்பலான "தாரகிரி" (யார்டு 12653), நவம்பர் 28, 2025 அன்று, மும்பையில் உள்ள அந்த கப்பல் கட்டுமான நிறுவனத்தால் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. 

போர்க்கப்பலின் வடிவமைப்பு, கட்டுமானம் போன்ற அம்சங்களில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. செயல்திட்டம் 17Aன் கீழ், பன்முகத்தன்மை கொண்ட தளங்களில்,போர்க்கப்பல்கள், கடற்பகுதிகளில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1980 -ம் ஆண்டு மே 16 முதல் 2013 -ம் ஆண்டு ஜூன் 27 வரை இந்தியக் கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த, லியாண்டர் வகையைச் சேர்ந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரியின் மற்றொரு படைப்பாக இந்த தாராகிரி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த போர்க்கப்பல் 33 ஆண்டுகால புகழ்பெற்ற சேவையை நாட்டுக்கு வழங்கியுள்ளது. இந்த அதிநவீன போர்க்கப்பல் கடற்படை வடிவமைப்பு, ராடார் கண்காணிப்பு அமைப்புக்களால் எளிதில் கண்டறிய முடியாத, துப்பாக்கிச் சூடு, தானியங்கி மற்றும் உயிர்வாழும் தன்மை போன்ற அம்சங்களுடன் ஒரு மேம்பட்ட போர்க்கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் போர்க்கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டியுள்ளதற்கான அடையாளாச் சின்னமாகவும் அமைந்துள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel