ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.
இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சாதனம் ரத்த மாதிரியை சேகரித்தபின், மறுபடியும் பயன்படக் கூடிய வகையிலும், குறைந்த சக்தி கொண்ட காட்சித் திரைகளையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நுண்ணிய ஊசிக்கான தொலைஉணர்வு அமைப்பையும் கொண்டுள்ளது.


0 Comments