சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கவுன்சிலுக்கான தேர்தல், லண்டனில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தின்போது நடந்தது. பல்வேறு நாடுகள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், இந்தியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
கவுன்சில் தேர்தலில் மொத்தமாக 169 நாடுகள் வாக்களித்தன. அதில் இந்தியாவுக்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்தன. பெரும்பாலான நாடுகளின் ஆதரவைப் பெற்று இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உலகளாவிய கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிலைப்பாட்டிற்கும், பங்களிப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய நாடாக விளங்கும் இந்தியா, இந்த கவுன்சில் பதவியின் மூலம், கடல்சார் தொழிலின் விதிமுறைகளை உருவாக்குவதிலும், சர்வதேச கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும்.


0 Comments