உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் 2025 நவம்பர் 24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார்.
மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படை உயரதிகாரிகள், கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் மாஹே 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, தற்சார்பு இந்தியாவின் பிரகாசமான அடையாளமாக திகழ்கிறது.
உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இந்திய கடற்படையின் தொடர் முயற்சிகளை இந்தக் கப்பல் கட்டுமானம் சுட்டிக்காட்டுகிறது.


0 Comments