Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3 M5 ராக்கெட் / LVM3 M5 rocket successfully launched

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3 M5 ராக்கெட் / LVM3 M5 rocket successfully launched

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி துறையில் நாசாவுக்கு அடுத்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 5:26 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்திலிருந்து எல்.வி.எம்3 m5 ரக ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பயது இஸ்ரோ.

ராணுவ பாதுகாப்பு தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், ஆழ்கடல் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்கைக்கோள் விண்ணிற்கு ஏவப்படுகிறது.

சுமார் 35 ஆயிரத்து 656 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜிடிஓ எனும் புவி சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி ரக எல்விஎம் 3 ராக்கெட்.

இதுவரை தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக 48 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. 2013 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட GSAT 17 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதையொட்டி சுமார் 1600 கோடி ரூபாய் செலவீட்டில் மல்டி பேண்ட் உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருந்திய சிஎம்எஸ் 03 ரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது

இந்திய மண்ணிலிருந்து இத்தனை பெரிய (சுமார் 4 டன்) அளவு கொண்ட செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படுவது இதுவே முதன்முறை என்பதால் மிகவும் நம்பகத்தன்மையான lvm3 ரக ராக்கெட் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல் வி எம் 3 ரக ராக்கெட்டின் ஐந்தாவது பயணமாக இது அமைந்துள்ளது. இறுதியாக இந்தியாவை உலக நாடுகள் உற்றுப் பார்க்க வைத்த சந்திரயான் மூன்று திட்டத்திற்கும் இதே ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்துவதன் மூலம் ராணுவ தகவல் தெரிவிப்பதில் இந்தியா தன்னிறைவு பெறும். இதனால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel