வன்முறை, துன்புறுத்தல்களை எதிா்கொள்ளும் பெண்கள் உடனடி உதவியைப் பெறும் வகையில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் புதிய உதவி எண்ணை தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) அறிமுகம் செய்துள்ளது.
‘14490’ என்ற புதிய கட்டணமில்லா உதவி எண்ணில் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு உடனடி உதவியை பெண்கள் பெற முடியும். முன்னா் ‘7827170170’ என்ற நடைமுறையில் இருந்த நிலையில், இந்தப் புதிய உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


0 Comments