பூடானில் இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக்கும் உடன் இருந்தார். பூடானைச் சேர்ந்த டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன், 570 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத் திட்டத்திற்கு அதானி பவர் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இரு நிறுவனங்களிடையே மின்சார கொள்முதலுக்கும் உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் தோபே மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி முன்னிலையில் டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் - அதானி பவர் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


0 Comments