Recent Post

6/recent/ticker-posts

ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister modi attended the IPSA Leaders' Meeting held in Johannesburg

ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister modi attended the IPSA Leaders' Meeting held in Johannesburg

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஐபிஎஸ்ஏ (IBSA) எனப்படும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்த கூட்டத்தை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையேற்று நடத்தினார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வாவும் இதில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel