தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (27.11.2025) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விண்வெளித்துறையில் நாடு இன்று முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பைக் காண்கிறது என்றும், தனியார் துறை பங்கேற்பின் மூலம் இந்தியாவின் விண்வெளிச் சூழல் அமைப்பு மாபெரும் பாய்ச்சல் வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகம் என்பது இந்தியாவின் புதிய சிந்தனை, புத்தாக்கம், இளையோர் சக்தி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று கூறிய அவர், புத்தாக்கத்திலும் கடின உழைப்புத் திறனிலும் தொழில் முனைவிலும் நாட்டின் இளைஞர்கள் புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


0 Comments