முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த தியாகச் சுவரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்.
"முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின்படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் திருவுடலுக்கு அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 253 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளில் இத்தனை பேர் தானம் செய்திருப்பது இந்திய அளவில் தமிழ்நாட்டை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது. தற்போது 23,189 பேர் உடல் உறுப்பு தானம் பதிவு செய்துள்ளனர்.


0 Comments