வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' பாடலின் 150-ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இதை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 'வந்தே மாதரம்' ஒரு பாடல் அல்ல, ஒரு மந்திரம் என்றார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அது உந்து சக்தியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
1875-ல் முதன்முதலில் வெளியான இந்தப் பாடல், இந்திய விடுதலை இயக்கத்திற்கு புதிய வேகத்தை அளித்ததாக மோடி தெரிவித்தார். நூற்றாண்டு விழா நெருக்கடி நிலை காலத்தில் நடந்ததாக நினைவூட்டினார்.
இன்று 150-ஆவது ஆண்டு விழா சுதந்திர இந்தியாவில் நடைபெறுவது பெருமை என்றார். 2047 வளர்ந்த இந்தியா என்ற இலக்குக்கு இந்தப் பாடல் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என வலியுறுத்தினார்.


0 Comments