தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.12.2025) சென்னையில், விளையாட்டு வீரர் மேம்பாடு, பயிற்சி முறைகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உளவியல், விளையாட்டு உலகில் செயற்கை நுண்ணறிவு, பயிற்சி மற்றும் உயர் செயல்திறன் சூழலியல், விளையாட்டுப் பகுப்பாய்வு, 2036 ஒலிம்பிக் தொலைநோக்குத் திட்டம், விளையாட்டு மருத்துவம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025ஐ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து விளையாட்டு விடுதி வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி, உடல்திறன், நல்வாழ்வு தரவுகளைக் கொண்டு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடுவதை அடிப்படையாக கொண்ட அத்லெட் மேலாண்மை அமைப்பையும் (ATHLETE MANAGEMENT SYSTEM) தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


0 Comments