எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியின் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் போட்டியில் இந்தியாவும் ஆா்ஜென்டீனாவும் சென்னையில் மோதின.
இந்தப் போட்டியில் 3, 44-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனா 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த இந்திய அணி 49, 52, 57, 58-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது.
முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை இந்திய அணி 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜூனியர் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.


0 Comments