பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.


0 Comments