Recent Post

6/recent/ticker-posts

ஆஷஸ் 2026 தொடர் - ஆஸ்திரேலியா சாம்பியன் / Ashes 2026 Series - Australia Champions

ஆஷஸ் 2026 தொடர் - ஆஸ்திரேலியா சாம்பியன் / Ashes 2026 Series - Australia Champions

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர், விளையாடிய இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel