சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.
மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நீங்கள் வசிக்கும் தெரு, உங்களின் ஊர் எப்படி இருக்க வேண்டும்?, எந்த மாதிரியான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?,
தற்போதைய திட்டங்களை மேலும் செழுமையாக்க உங்களின் ஆலோசனைகள்?, மாவட்டத்தைப் பற்றிய கனவுகள் அயலகத் தமிழர்களின் கனவுகள உள்ளிட்டவைக் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை ஜனவரி 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 4 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர்ந்து ஆளுநர் உரையுடன் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.


0 Comments