Recent Post

6/recent/ticker-posts

இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026 விழாவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் / At the India Global Education Conference 2026 event, he laid the foundation stone for the Tamil Nadu Knowledge City project

இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026 விழாவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் / At the India Global Education Conference 2026 event, he laid the foundation stone for the Tamil Nadu Knowledge City project

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 29) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், "இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026" (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், அறிவு, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மெல்போர்ன் பல்கலைக்கழகம் - குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறைகளில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தை 20,000 சதுர அடியில் 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து ஆண்டுகளில் Knowledge Corridor-ஐ நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 200 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

ஐஐடி சென்னை - மேம்பட்ட ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மையம், மின்சார வாகனங்களுக்கான மாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் சோதனை ஆய்வகத்தை 40,000 சதுர அடியில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge Tower-ல் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 100 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

ஐஐடி சென்னை குளோபல் 20,000 சதுர அடியில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி திறன் வசதி மையத்தை மேம்பட்ட திறன் மற்றும் புதுமையை முன்னெடுக்கும் வகையில் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.

ஆர்க்ஸீ, கார்பன் பிடிப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் 10,000 சதுர அடியில் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.

அக்யூமென், TIDCO உடன் இணைந்து 120 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge City-யை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை திட்டங்களை செயல்படுத்த விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 150 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுகூனம் (Guidance Tamil Nadu) உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில், 5 விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டு, 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் ரூ. 355 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடன், 2,255 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 9,650 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel