அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2030-31-ம் நிதியாண்டு வரை தொடர்வதற்கும், நிதிப்பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கும் மக்கள் தொடர்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஆதரவை நீட்டிப்பதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, விழிப்புணர்வு, திறன் மேம்பாடு உள்ளிட்டவை மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களிடையே இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தல் நிதிப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வது மற்றும் இத்திட்டத்தின் நீடித்தத் தன்மையை உறுதி செய்வது ஆகியவை இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் லட்சக்கணக்கான குறைந்த வருவாய் உடைய மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமைக்கால வருவாய்ப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தி ஓய்வூதிய சமூகத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்திற்கு இது ஆதரவளிக்கிறது. நீடித்த சமூக பாதுகாப்பை அளிப்பதன் மூலம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை இம்முடிவு வலுப்படுத்துகிறது.


0 Comments