கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடா்ந்து திருவனந்தபுரம் நவீன அஞ்சலகத்தையும் அவர் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம் - சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ருத் பாரத் ரயில் சேவைகளையும், திருச்சூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவையையும் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


0 Comments