Recent Post

6/recent/ticker-posts

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்புள்ள ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated rail and road infrastructure projects worth ₹3,250 crore in Malda, West Bengal

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்புள்ள ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated rail and road infrastructure projects worth ₹3,250 crore in Malda, West Bengal

மேற்கு வங்காளத்தின் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்பிலான பல ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மால்டா டவுன் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஹவுரா - குவஹாத்தி (காமாக்யா) இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்தவும், சீரான போக்குவரத்தை எளிதாக்கவும் உதவும் ஒரு முக்கிய சாலைத் திட்டமான தேசிய நெடுஞ்சாலை-31டி-யின் துப்குரி-ஃபாலகட்டா பிரிவின் மறுசீரமைப்பு மற்றும் நான்கு வழிச்சாலைப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பாலுர்காட் - ஹிலி இடையேயான புதிய ரயில் பாதை, நியூ ஜல்பைகுரியில் அடுத்த தலைமுறை ரயில்வே சரக்கு பராமரிப்பு வசதிகள், ஜல்பைகுரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட நான்கு முக்கிய ரயில் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

நியூ கூச்பெஹார்-பமன்ஹாட், நியூ கூச்பெஹார்-பாக்சிர்ஹாட் இடையேயான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், பிரதமர் 4 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை காணொலி வழியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். நியூ ஜல்பைகுரி- நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி- திருச்சிராப்பள்ளி, அலிப்பூர்துவார் - எஸ்எம்விடி பெங்களூரு, அலிப்பூர்துவார் - மும்பை (பன்வெல்) அம்ரித் விரைவு ரயில் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel