Recent Post

6/recent/ticker-posts

முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 / First International Textile Industry Conference 360

முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 / First International Textile Industry Conference 360

கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற 'முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360' (International Textile Summit) நிகழ்வில், தமிழகத்தின் ஜவுளித் துறையில் மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் மொத்தம் 13,080 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மாநாட்டில் 'தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2024-25' வெளியீடு மற்றும் மானிய திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்தப் பெறப்படும் வங்கி கடனுக்கு 2% வட்டி மானியம் (7 ஆண்டுகளுக்கு) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண விசைத்தறிகளைத் தானியங்கி ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% மானியமும் (அதிகபட்சம் 1.00 லட்சம் ரூபாய்), புதிய தானியங்கி தறிகள் வாங்க 20% முதலீட்டு மானியமும் வழங்கப்படுகிறது.

புதிய துணி நூல் பதனிடும் ஆலைகளைத் தொடங்கவும், பழைய ஆலைகளை நவீனப்படுத்தவும் 3 நிறுவனங்களுக்கு 10.92 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களைச் சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்கள் என 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற நிறுவனங்களுக்குத் தலா 2.00 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel