சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் 2025-2026 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், 50 திருநங்கைகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி தகுதி வாய்ந்த திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு ஊர்க்காவல் படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இன்று தேர்வான திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதற்கட்டமாக தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தாம்பரத்தில் 15 நபர்கள், ஆவடியில் 10 நபர்கள், மதுரையில் 7 நபர்கள், கோயம்புத்தூரில் 7 நபர்கள், திருச்சியில் 6 நபர்கள் மற்றும் சென்னையில் 5 நபர்கள் என மொத்தம் 50 திருநங்கைகள் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் பயிற்சிகளை வழங்கி ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


0 Comments