அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு (தேசிய நெடுஞ்சாலை-715-ன் கலியாபோர்-நுமலிகார் பிரிவின் 4-வழித்தடம்) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2026) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 Comments