இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி டாலராக உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மொத்த கையிருப்பு 436.8 கோடி டாலர் அதிகரித்து 69,331.8 கோடி டாலராக உள்ளதாக தெரிவித்தது. மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பு சுமார் 18.4 கோடி டாலர் அதிகரித்து 55,961.2 கோடி டாலராக உள்ளது.


0 Comments