இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


0 Comments