Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் 'டீப் டெக்' கொள்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin Launches India's First 'Deep Tech' Policy

இந்தியாவின் முதல் 'டீப் டெக்' கொள்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin Launches India's First 'Deep Tech' Policyஇந்தியாவின் முதல் 'டீப் டெக்' கொள்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin Launches India's First 'Deep Tech' Policy

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவின் முதல் பிரத்யேக 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை' (Deep Tech Startup Policy 2025-26) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 'யுமாஜின் டிஎன்' (Umagine TN) சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இந்தக் கொள்கை தொடங்கி வைக்கப்பட்டது.

இது தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு சர்வதேச தொழில்நுட்ப மற்றும் புதுமை (Technology + Innovation) மாநாடாகும். தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக (Global Tech Hub) மாற்றும் நோக்கோடும், 'வருங்காலத்திற்குத் தயாரான தமிழ்நாடு' (Future Ready Tamil Nadu) என்ற இலக்கை முன்னிறுத்தியும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் (Data Science), நிதித் தொழில்நுட்பம் (FinTech), சுகாதாரம் (HealthTech), மற்றும் பருவநிலை தொழில்நுட்பம் (ClimateTech) போன்ற துறைகளின் முன்னணி நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel